மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 ஆக 2021

ரிலாக்ஸ் டைம்: கதம்ப சிறுதானிய சூப்!

ரிலாக்ஸ் டைம்: கதம்ப சிறுதானிய சூப்!

கலோரியைக் குறைப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கான நிறைவான உணவு இந்த கதம்ப சிறுதானிய சூப். நாள் முழுக்கப் புத்துணர்ச்சி தரும் இந்த ஹெல்த்தி சூப்பை ரிலாக்ஸ் டைமில் பருகலாம்.

எப்படிச் செய்வது?

தலா 50 கிராம் குதிரைவாலி, வரகு, சாமை எடுத்துக்கொள்ளுங்கள். அனைத்து சிறுதானியங்களையும் கழுவி சுத்தம் செய்து, நீர் சேர்த்து ஊறவைக்கவும். தானியங்கள் ஊறிய தண்ணீரோடு அப்படியே அடுப்பில் வைத்து, 50 கிராம் பாசிப்பருப்பு சேர்த்து கஞ்சிப்பதம் வரும் வரை வேகவிடவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு அரை டீஸ்பூன் சீரகம், கீறிய இரண்டு பச்சை மிளகாய், நசுக்கிய நான்கு பூண்டு பற்கள், பொடியாக நறுக்கிய பத்து சின்ன வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, வேகவைத்த கலவையை ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு, ஒரு கப் தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும். தேவையான அளவு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

சிறப்பு

வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்தது. சிறுதானியங்கள் நீரிழிவு மற்றும் இதய நோய்க்கான வாய்ப்பைத் தடுக்கின்றன. அனைவருக்கும் ஏற்றது. ஆரோக்கியமானது.

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

செவ்வாய் 17 ஆக 2021