மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 ஆக 2021

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகப் போராட்டம்: வழக்கை விசாரிக்க தடை!

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகப் போராட்டம்: வழக்கை விசாரிக்க தடை!

ஸ்டெர்லைட் ஆலையில் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிப்புக்கு அனுமதிக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துணைத்தலைவர் சுமதி, புதியம்புதூரைச் சேர்ந்த கதிரேசன், செந்தில்குமார் உட்பட பலர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். அதில், தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை மக்கள் போராட்டத்தினால் 2018ஆம் ஆண்டில் மூடப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக உச்ச நீதிமன்ற அனுமதியின்பேரில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய அவகாசம் ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படக் கூடாது, இதனால் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கவும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கக் கோரியும் ஜூலை 27ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலை முன்பு சிலர் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, கொரோனா காலத்தில் விதிமுறைகளை மீறி ஒரே இடத்தில் கூட்டமாக கூடியதற்காக அவர்கள் மீது சிப்காட் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படக் கூடாது என்ற நோக்கத்திலேயே அவர்கள் கூடினர். இதனால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று (ஆகஸ்ட் 16) நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், மனு தொடர்பாக சிப்காட் போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டும் விசாரணையை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

-வினிதா

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

செவ்வாய் 17 ஆக 2021