மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 ஆக 2021

கிச்சன் கீர்த்தனா: பீட்சா தோசை

கிச்சன் கீர்த்தனா: பீட்சா தோசை

ஆரோக்கிய தோசை வரிசையில் சிறுதானிய தோசை, பனீர் தோசை, காளான் தோசை, முடக்கத்தான் இலை தோசை, முருங்கை இலை தோசை ஆகியவை முன்னிலை வகித்தாலும் இந்த பீட்சா தோசை அனைவராலும் விரும்பப்படும் தோசையாக டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. நீங்களும் உங்கள் இல்லத்தில் செய்து அசத்தலாம்.

என்ன தேவை?

சிறுதானிய தோசை மாவு - 2 கரண்டி

பீட்சா சாஸ் - ஒன்றரை டீஸ்பூன்

பனீர் - 25 கிராம்

பச்சைப்பட்டாணி - 20 கிராம்

முட்டைகோஸ் - 20 கிராம்

வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 20 கிராம்

பேபி கார்ன் - 15 கிராம்

ஸ்வீட் கார்ன் - 10 கிராம்

சீஸ் - 20 கிராம்

ரெட் சட்னி - ஒரு கரண்டி

எப்படிச் செய்வது?

தோசைக்கல்லில் 2 கரண்டி மாவைவிட்டு தேய்த்துக்கொள்ளவும். பின்னர் தோசை மேல் வெண்ணெய் போட்டு, நறுக்கி வைத்த வெங்காயம், பச்சைப்பட்டாணி மற்றும் பீட்சா சாஸ் சேர்த்து, பிறகு தோசையின் மேல் துருவிய பனீர் மற்றும் துருவிய முட்டைகோஸை பரவலாகப் போட வேண்டும். தொடர்ந்து தோசை மேல் பேபி கார்ன் தூவி, அதன் மேல் ரெட் சட்னி ஊற்றி நன்றாகக் கிளறவும். கடைசியாக தோசையின் மேல் சீஸைத் துருவி விட்டு, ஸ்வீட் கார்னைப் பரவலாகத் தூவி கல்லில் இருந்து எடுத்து தட்டில் வைத்தால், சுவையான பீட்சா தோசை ரெடி.

சிறுதானிய தோசை மாவு தயாரிக்க...

கேரள சிவப்பரிசியை தேவையான அளவு எடுத்து மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும். சிறுதானிய வகைகளையும் மாவாக அரைத்து இரண்டையும் சரிபாதி விகிதத்தில் எடுத்து பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு, தோசைக்கு மாவுக் கரைசலைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

மாவு அரைப்பது சிரமமாகத் தோன்றினால் சிவப்பரிசி மாவும் சிறுதானிய வகைகள் மாவும் இரண்டுமே கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி உப்பு, தண்ணீர் சேர்த்து தயார் செய்யலாம். இரவு தோசை ஊற்றப்போவதாக இருந்தால் காலையிலேயே மாவுக் கரைசலை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் புளிப்புத் தன்மை ஏற்பட்டு, தோசையின் சுவை பிரமாதமாக இருக்கும்.

ரெட் சட்னி தயாரிக்க...

கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடானவுடன் தேவையான அளவு பட்டை, லவங்கம் மற்றும் ஏலக்காயைச் சேர்த்து நன்கு வதக்கவும். பின் நறுக்கிவைத்த பெரிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதங்கியதும் அதில் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பிறகு சிறிதளவு வெல்லம் மற்றும் சுவைக்கேற்ப புளி சேர்த்து கிளறி இறுதியாக காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி உப்பு சேர்த்து இறக்கினால் ரெட் சட்னி செய்வதற்கான மசாலா கலவை தயார். மிக்ஸியில் சட்னிக்குத் தேவையான அளவு பொட்டுக்கடலையைச் சேர்த்து அத்துடன் தயார் செய்துவைத்த மசாலா கலவையைக்கொட்டி அரைத்தெடுத்தால் வகை வகையான தோசைகளுடன் சேர்க்கும் ரெட் சட்னி தயார்.

நேற்றைய ரெசிப்பி: மேகி தோசை!

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

செவ்வாய் 17 ஆக 2021