மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 ஆக 2021

நெகட்டிவ் சான்றிதழுடன் கேரளா செல்லும் தமிழகத் தொழிலாளர்கள்!

நெகட்டிவ் சான்றிதழுடன் கேரளா செல்லும் தமிழகத் தொழிலாளர்கள்!

கொரோனா பரவல் காரணமாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள், நெகட்டிவ் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே கேரளாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து எல்லைப் பகுதியான கேரளாவுக்கு உட்பட்ட இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலத் தோட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான ஏழை, எளிய தொழிலாளர்கள் ஜீப் வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர்.

கொரோனா அசாதாரண சூழல் காரணமாக, கடந்த மாத இறுதியில் தொழிலாளர்கள் கேரளாவுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் தமிழக - கேரள எல்லையிலிருந்து கேரளாவுக்கு தினசரி வேலைக்குச் செல்லும் தமிழக தோட்டத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து இவர்கள் சோதனைகள் செய்யாமல் அனுமதிக்க வேண்டுமென பல போராட்டங்கள் செய்து வந்தனர். ஆனாலும் கேரள சோதனைச்சாவடியில் போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவுக்குள் அனுமதிக்கக் கோரி, ஐந்து ஜீப்களில் தோட்டத் தொழிலாளர்கள் தமிழக - கேரள எல்லையான கம்பம்மெட்டு சோதனைச்சாவடி அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்ற ஏலத்தோட்டத் தொழிலாளர்கள் சுமார் 40 பேர், நேற்று (ஆகஸ்ட் 15) கம்பத்திலிருந்து வாகனங்களில் கேரளாவுக்கு வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

-ராஜ்

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

திங்கள் 16 ஆக 2021