மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 ஆக 2021

கிருஷ்ணா நதி: திடீர் வெள்ளத்தில் சிக்கிய 70 லாரிகள்!

கிருஷ்ணா நதி: திடீர் வெள்ளத்தில் சிக்கிய 70 லாரிகள்!

கிருஷ்ணா நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றில் மணல் எடுக்க சென்ற 70 லாரிகள் சிக்கிக்கொண்டுள்ளன.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், நந்திகாமா தொகுதியில் உள்ள கிருஷ்ணா நதியில் திடீரென நேற்று (ஆகஸ்ட் 15) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றில் மணல் எடுக்க சென்ற 70 லாரிகள் கரைக்குத் திரும்ப முடியாமல் வெள்ளத்தில் சிக்கின. மேலும், ஆற்றில் போடப்பட்டிருந்த சாலைகள் வெள்ளத்தில் முழுவதுமாக சேதமடைந்தன.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், வருவாய்த் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லாரி டிரைவர்களை படகு மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து லாரிகளை மீட்கும் பணி நடந்து வருகிறது.

புலிசிந்துலா அணையில் இருந்து 25,000 கன அடி தண்ணீரும், முன்னேறு அணையில் இருந்து 15,000 கன அடி தண்ணீரும் உபரி நீராக கிருஷ்ணா நதியில் திறக்கப்பட்டதால் இந்த திடீர் வெள்ளம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

-ராஜ்

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்! ...

3 நிமிட வாசிப்பு

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

திங்கள் 16 ஆக 2021