மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 ஆக 2021

ரூ.1.5 கோடிக்கு பருத்தி விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி!

ரூ.1.5 கோடிக்கு பருத்தி விற்பனை:  விவசாயிகள் மகிழ்ச்சி!

ஈரோடு மாவட்டம், பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தியின் விலை அதிகரித்து ரூ.1.5 கோடிக்கு விற்பனையாகி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றான அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். இந்த வாரம் நடந்த ஏலத்துக்கு கர்நாடக மாநிலம் மற்றும் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், கொளத்தூர், எடப்பாடி, தேவூர், அந்தியூர், பவானி, அம்மாபேட்டை ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை இங்கு ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தார்கள்.

மொத்தம் 5,943 மூட்டை பருத்தி விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில் இங்கு ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் குறைந்தபட்ச விலையாக ரூ.7,389-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.8,890-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 கோடியே 60 லட்சத்து 44,825-க்கு விற்பனையானது.

கோவை, புளியம்பட்டி, அன்னூர், தேனி, பெருந்துறை, தருமபுரி, கொங்கணாபுரம், அந்தியூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் போட்டி போட்டு பருத்தியை ஏலம் எடுத்து சென்றார்கள்.

கடந்த வாரத்தை விட இந்த வாரம் பருத்தி அதிக விலைக்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

-ராஜ்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

திங்கள் 16 ஆக 2021