மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 ஆக 2021

பொறுப்பை ஏற்றுக் கொண்ட புதிய அர்ச்சகர்கள்!

பொறுப்பை ஏற்றுக் கொண்ட புதிய அர்ச்சகர்கள்!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் புதிய அர்ச்சகர்கள் பதவியேற்று கோயில்களில் தங்கள் பணியை ஆரம்பித்துள்ளனர்.

திமுக ஆட்சியின் 100வது நாளான ஆகஸ்ட் 14ஆம் தேதி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் 5 தலித்துகள் உட்பட வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த 58 பேரை அர்ச்சகர்களாக நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த அறிவிப்பை பல்வேறு அரசியல் தலைவர்களும் வரவேற்று பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் பணி ஆணை பெற்ற அர்ச்சகர்கள் தாங்கள் நியமிக்கப்பட்ட கோயில்களில் பணியை தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் முதல் முறையாக நியமிக்கப்பட்ட பெண் ஓதுவார் நேற்று தேனுபுரீஸ்வர் கோயிலில் தனது பணியை தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து மூன்று புதிய அர்ச்சர்கள் பணியை தொடங்கியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் உள்ள சேது நாராயண பெருமாள் கோயிலில் கண்ணபிரான் என்பவரும், சாத்தூரில் உள்ள வெங்கடாசலபதி கோயிலில் கோவில்பட்டியை சேர்ந்த சீனிவாசன் என்பவரும், தளவாய்புரம் சேத்தூர் அருகே உள்ள தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் நிர்வாகத்துக்கு உட்பட்ட நாகமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கரிவலம் வந்த நல்லூர் பகுதியை சேர்ந்த வண்ணமுத்து என்பவரும் தங்கள் அர்ச்சகர் பணியை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், பதினைந்து நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோயில் அருகே உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோயிலிலுள்ள 22 புண்ணிய தீர்த்த கிணறுகளில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

திங்கள் 16 ஆக 2021