மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 ஆக 2021

முதியவர்கள் அதிகமுள்ள மாநிலங்கள் : தமிழ்நாடு எந்த இடம்?

முதியவர்கள் அதிகமுள்ள மாநிலங்கள் : தமிழ்நாடு எந்த இடம்?

நாட்டிலேயே முதியவர்கள் அதிகமுள்ள மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இதுகுறித்து ஒன்றிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில்,” நாட்டிலேயே கேரள மாநிலத்தில்தான் முதியவர்கள் அதிகமாக உள்ளனர். அங்கு மொத்த மக்கள்தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை 16.5 சதவிகிதமாக உள்ளது. இதற்கடுத்தபடியாக தமிழ்நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கை 13.6 சதவிகிதமாகவும், ஹிமாச்சல் பிரதேசத்தில் 13.1 சதவிகிதமாகவும், பஞ்சாப்பில் 12.6 சதவிகிதமாகவும், ஆந்திராவில் 12.4 சதவிகிதமாகவும் உள்ளது.

முதியவர்கள் குறைவாக உள்ள மாநிலங்களும் வரிசைப்படுத்தபப்ட்டுள்ளன. பீகாரில் 7.7 சதவிகிதமாகவும், உத்தரப்பிரதேசத்தில் 8.1 சதவிகிதமாகவும், அசாமில் 8.2 சதவிகிதமாகவும் முதியவர்களின் எண்ணிக்கை உள்ளது.

2011-2021 ஆண்டுகளில் மொத்த மக்கள் தொகை 12.4 சதவிகிதமும், முதியவர்களின் எண்ணிக்கை 35.8 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. 2031ஆம் ஆண்டில் முதியவர்களின் எண்ணிக்கை 40.5 சதவிகிதமாக அதிகரிக்கக் கூடும்.

நாட்டில் இறப்பு விகிதம் குறைந்துள்ளதால் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாநிலத்தில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, அங்கு பொருளாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

திங்கள் 16 ஆக 2021