மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 ஆக 2021

நீதிபதி கொலை: தகவல் அளிப்பவருக்கு ரூ.5 லட்சம்!

நீதிபதி கொலை: தகவல் அளிப்பவருக்கு ரூ.5 லட்சம்!

ஜார்கண்ட் நீதிபதி கொலை தொடர்பாக முக்கிய தகவல் கொடுப்போருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என சிபிஐ அறிவித்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதியாக பணியாற்றிவந்த உத்தம் ஆனந்த் கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதன்மூலம்தான் இது விபத்து இல்லை, திட்டமிடப்பட்ட கொலை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்த மாநில அரசு, இதுகுறித்த விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்தது.

இந்தக் கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டாளியிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உச்ச நீதிமன்றமும் இந்த வழக்கைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

கடந்த வியாழக்கிழமையன்று, சிபிஐ தனது முதல் நிலை அறிக்கையை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், இதுவரையில் நடந்த விசாரணையின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிபிஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை தொடர்பாக முக்கிய தகவல் தெரிந்தவர்கள், அதுகுறித்து தொலைபேசி மூலம் சிபிஐக்குத் தெரிவிக்கலாம். கொலை தொடர்பான பயனுள்ள, நம்பகமான தகவல்களை அளிக்கும் நபருக்கு ரூ .5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். தகவல் கொடுப்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்பான போஸ்டர்கள் தன்பாத் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

திங்கள் 16 ஆக 2021