மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 ஆக 2021

மூக்கில் உறிஞ்சும் மருந்து: பரிசோதனைக்கு அனுமதி!

மூக்கில் உறிஞ்சும்  மருந்து: பரிசோதனைக்கு அனுமதி!

மூக்கின் மூலம் உறிஞ்சக்கூடிய கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் இரண்டாவதுகட்ட க்ளினிக்கல் பரிசோதனைக்கு பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு இந்திய மருந்துத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் தடுப்பூசி முக்கிய பங்காற்றி வருகிறது. தற்போது, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக்-வி போன்ற தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில், மூக்கின் மூலம் உறிஞ்சும் கொரோனா மருந்து பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கின் மூலம் உறிஞ்சக்கூடிய கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தின் முதற்கட்ட கிளினிக்கல் பரிசோதனை முடிந்துவிட்டது.

பிபிவி154 எனும் பெயர் கொண்ட இந்த மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்க அமெரிக்காவின் செயின்ட் லூசியாவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப அனுமதியைப் பெற்றுள்ளது.

இந்த மருந்து தயாரிப்புக்குத் தேவையான ஆதரவை ஒன்றிய உயிர் தொழில்நுட்பத் துறையும், அதனுடைய நிறுவனமான உயிர்தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சிலும் வழங்குகிறது.

முதற்கட்ட பரிசோதனையில் 18 வயது முதல் 60 வயதுள்ள ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்குச் செலுத்தப்பட்ட மருந்து சிறப்பாக வேலை செய்கிறது.

இந்த மருந்து பாதுகாப்பானது மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடியது என்பது விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, மூக்கில் உறிஞ்சும் கொரோனா மருந்தின் இரண்டாம்கட்ட பரிசோதனைக்கு இந்திய மருந்துத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

திங்கள் 16 ஆக 2021