மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 ஆக 2021

ஒரு வீட்டுக்கு ஒரு கார் மட்டுமே: நீதிமன்றம் அதிரடி!

ஒரு வீட்டுக்கு ஒரு கார் மட்டுமே:  நீதிமன்றம் அதிரடி!

சாலைகளில் வாகனங்கள் பெருத்துவிட்டன. ஒரு வீடு வைத்திருப்பவர்கள் நான்கு அல்லது ஐந்து கார்களை வைக்க அனுமதிக்கக் கூடாது என மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நவிமும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் குடியிருப்பு கட்டடங்களில் வாகன நிறுத்தப் பகுதியை குறைக்க கட்டுமான அதிபர்களுக்கு அனுமதி அளிக்கும் அரசின் சட்டத் திருத்தத்துக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். மேலும் அவர், கட்டுமான அதிபர்கள் வாகன நிறுத்தப்பகுதியைக் குறைத்தால், குடியிருப்புவாசிகள் வாகனங்களை சாலைகளில் நிறுத்த வேண்டிய நிலை வரும் எனவும் அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி திபான்கர் தத்தா, நீதிபதி ஜி.எஸ்.குல்கர்னி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது. இதில் மனுவை விசாரித்த நீதிபதிகள் வாகனங்களை நிறுத்த போதிய இடம் இல்லை என்றால், பொதுமக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட சொந்த வாகனங்களை நிறுத்த அதிகாரிகள் அனுமதி வழங்கக் கூடாது எனக் கூறினர்.

மேலும் இதுகுறித்து அவர்கள், “புதிய கார்களை வாங்குவதைக் குறைப்பது அவசியமாகி உள்ளது. வாங்க முடிகிறது என்பதால் ஒரு வீடு வைத்து உள்ள குடும்பத்தினர் நான்கு அல்லது ஐந்து வாகனங்களை வைக்க நீங்கள் அனுமதிக்க முடியாது. அவர்களுக்கு வாகன நிறுத்த இடம் உள்ளதா என்பதையும் நீங்கள் சரிபார்த்து கொள்ள வேண்டும். எல்லா சாலைகள், இடங்களிலும் வாகனங்கள் பெருத்து காணப்படுகின்றன. இரண்டு பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்தவே சாலையில் 30 சதவிகித இடம் ஆக்கிரமிக்கப்படுகிறது. இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்க விதிகள் இயற்றப்பட வேண்டும்” என்றனர். மேலும் இந்த மனு குறித்து இரண்டு வாரத்தில் பதில் அளிக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் தற்போது மொத்த வாகனங்களின் எண்ணிக்கை மூன்று கோடியைத் தாண்டியுள்ள நிலையில், இதுபோன்ற நடைமுறைகள் சென்னை போன்ற பெருநகரங்களில் மேற்கொள்ளப்படுமா என்பது சென்னைவாசிகளின் எதிர்பார்ப்பதாக இருக்கிறது. இதனால் பெருகிவரும் காற்று மாசுபடும் குறையும் என்கிறார்கள் சுற்றுச்சூழ ஆர்வலர்கள்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

ஞாயிறு 15 ஆக 2021