மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 ஆக 2021

ஓணம்: களையிழந்த மார்க்கெட் – கவலையில் வியாபாரிகள்!

ஓணம்: களையிழந்த மார்க்கெட் – கவலையில் வியாபாரிகள்!

ஓணம் பண்டிகை தொடங்கியும் கேரள வியாபாரிகள் பூக்கள் வாங்க வரவில்லை. இதனால், தோவாளை பூ மார்க்கெட் களை கட்டாததால் வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் புகழ்பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்தும், வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும் பூக்கள் வந்து குவிகின்றன. அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் பூக்கள் அனுப்பப்படுகிறது.

பண்டிகை மற்றும் திருவிழா, கோயில் விழா காலங்களில் பூக்கள் விலை உயர்ந்து காணப்படும். மற்ற நாட்களில் விலை குறைவாக இருக்கும். முக்கியமாக கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகையையொட்டி பூக்களின் விலை உச்சத்தில் இருக்கும். அப்போது, சுமார் 500 டன்னுக்கு மேலாக பூக்கள் விற்பனையாகும். கேரள வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வந்து பூக்களை கொள்முதல் செய்து விட்டு செல்வார்கள்.

இந்த ஆண்டு ஓணம் பண்டிகை தற்போது தொடங்கியுள்ளது. ஆனாலும், கொரோனா காரணமாக கேரளாவில் இருந்து ஒரு வியாபாரிகூட தோவாளை பூ மார்க்கெட்டுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், தோவாளை பூ வியாபாரிகள் கவலையில் உள்ளனர். சென்ற ஆண்டை போலவும் இந்த ஆண்டும் வியாபாரம் மந்தமாக இருக்குமோ என அச்சத்தில் உள்ளனர். ஆயினும் நேற்று ஆடி கடைசி வெள்ளி என்பதால் உள்ளூர் சிறு வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்ததால் பூக்கள் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.

ஓணப்பண்டிகை விற்பனை குறித்து பூ வியாபாரி கிருஷ்ணகுமார், “கேரளாவில் 12ஆம் தேதி ஓணம் முதல் நாள் திருவிழா தொடங்கியது. ஆனால், கேரளாவில் இருந்து இதுவரையும் பூ மார்க்கெட்டுக்கு ஒரு வியாபாரிகூட வரவில்லை என்பது மிகவும் வேதனை தருகிறது. பொதுவாக ஓணம் பண்டிகை முதல் நாள் திருவிழா தொடங்கும் போது சுமார் 50 டன் பூக்கள் மார்க்கெட்டுக்கு வரும், உடனே விற்று தீர்ந்து விடும். ஆனால், தற்போது மார்க்கெட்டுக்கு வரும் 20 டன் பூக்களும் விற்பனையாகாமல் தேக்கம் அடைகிறது. எப்போதும், களை கட்டும் ஓணப்பண்டிகை வியாபாரம் இந்த ஆண்டு எப்படி இருக்குமோ என எங்களுக்கு கவலையாக உள்ளது” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

-ராஜ்

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஞாயிறு 15 ஆக 2021