மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 ஆக 2021

தமிழ்நாட்டின் முதல் பெண் ஓதுவார்!

தமிழ்நாட்டின் முதல் பெண் ஓதுவார்!

தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தில் சுஹாஞ்சனா என்ற பெண் முதல் முறையாக ஓதுவாராக நியமிக்கப்பட்டதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கொண்டு வந்தாலும், அப்போது அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், திமுக ஆட்சி அமைந்தவுடன், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டது.

திமுக ஆட்சிக்கு வந்து 100வது நாளான நேற்று(ஆகஸ்ட் 14) அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் 5 தலித்துகள் உட்பட வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த 58 பேரை அர்ச்சகர்களாக நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதில் சுஹாஞ்சனா என்ற பெண் ஒருவர், சென்னையில் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோயிலில் ஓதுவார் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டிலேயே பெண் ஒருவர் ஓதுவாராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பதால் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஓதுவாராக இன்று பணியைத் தொடங்கிய சுஹாஞ்சனா தேனுபுரீஸ்வர் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்து தமிழில் 'சைவ திருமுறைகள்' பாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து சுஹாஞ்சனா கூறுகையில்,” எனக்கு ஓதுவார் பணி கிடைத்தது மகிழ்ச்சி. பெண்கள் ஓதுவார் பயிற்சி பெறவேண்டும். ஏனெனில், இது குழந்தைகள் பக்தி நெறியுடன் வளர தூண்டுதலாக இருக்கும். குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கவே தேவாரம், திருவாசகம் படித்தேன். ஆனால் ஓதுவார் பணி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை . இறைவன் முன்பு பாடல் பாட வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. தற்போது நிறைவேறியுள்ளது. இதற்கு முன்னர் ஆண்கள் மட்டுமே ஓதுவாராக இருந்துள்ளனர். முதல் முறையாக பெண்ணாகிய எனக்கு ஓதுவார் பணி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

ஞாயிறு 15 ஆக 2021