மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 ஆக 2021

சென்னையில் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சென்னையில் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக் கொண்ட நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வரும் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா காரணமாக வெளிநாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்கும், இங்கே இருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. கொரோனா இரண்டாம் அலை குறைய ஆரம்பித்த பிறகு உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, வெளிநாட்டு பயணிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் கட்டாயம் போட்டு இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. 30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவு கிடைத்துவிடும்.

இந்நிலையில், கடந்த மாதம் வரை 10க்கும் குறைவான சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 15க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து விமான நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,”சென்னை விமான நிலையத்தில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒருநாளைக்கு சுமார் 10,000 பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர்.இருப்பினும்,இது கொரோனா தொற்றுக்கு முந்தைய காலங்களுடன் ஒப்பிடும்போது வெகு குறைவுதான்” என்று கூறினார்.

ஏர்-டிராவல் ஏஜெண்ட்ஸ் அசோசியனைச் சேர்ந்த சுதிஷ் கிருஷ்ணன் கூறுகையில், “நிச்சயமாக, விமானங்களின் அதிகரிப்பு மற்றும் பயணிகளின் எண்ணிக்கை ஒரு நல்ல அறிகுறிதான். ஆனால் விமான நிறுவனங்கள் பயண கட்டணத்தை உயர்த்தியுள்ளதால், விடுமுறை அல்லது ஓய்வுக்காக செல்வோர்கள் விமான பயணத்தை தவிர்ப்பார்கள். அவசர தேவை இருப்பவர்கள் மட்டுமே கட்டணம் அதிகமாக இருந்தாலும் பயணம் செய்வார்கள். ஏனெனில், இதற்கு பதிலாக குறைவான விலையில் ரயில் சேவை உள்ளதால், அதை பலரும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். எனவே விமான நிறுவனங்கள் இதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப விலையை நிர்ணயிக்க வேண்டும்” என்று கூறினார்.

-வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

ஞாயிறு 15 ஆக 2021