மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 ஆக 2021

’75’ பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இலவச பெட்ரோல்!

’75’ பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இலவச பெட்ரோல்!

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில் 75 என்ற பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு 75 ரூபாய் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் இன்று(ஆகஸ்ட் 15) 75வது சுதந்திர தினம் கொரோனா காரணமாக எளிமையான முறையில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் இந்தியன் ஆயில் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் போட வரும் வாகனங்களின் பதிவு எண் 75 என இருந்தால் அந்த வாகனங்களுக்கு 75 ரூபாய்க்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி வாகனத்தின் பதிவு எண்ணில் முதல் இரண்டு எண்கள் 75 அல்லது கடைசி இரண்டு எண்கள் 75 என்று இருக்கும் வாகனங்களுக்கு 75 ரூபாய் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இந்த சலுகையை கேள்விப்பட்ட அந்த பதிவெண் கொண்ட பலரும் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.

-வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

ஞாயிறு 15 ஆக 2021