மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 ஆக 2021

சென்னை மெட்ரோவின் சுதந்திர தின செல்ஃபி பாய்ண்ட்!

சென்னை மெட்ரோவின் சுதந்திர தின செல்ஃபி பாய்ண்ட்!

சென்னையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு I Love India என்ற வசனத்துடன் செல்ஃபி பாய்ண்ட் ஒன்றை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அமைத்துள்ளது.

இன்று(ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார்கள். அதுபோன்று, அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகின்றனர்.

சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் சில நிறுவனங்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

அந்த வகையில் சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில் நிலையம் முழுவதும் தேசியக் கொடியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தின் வெளிப்புறம், உட்புறம் என அனைத்துப் பகுதிகளும் சுதந்திர போராட்ட தியாகிகளின் படங்களுடன் அவர்கள் பற்றிய குறிப்புடன் சுதந்திர தின செய்தி இடம்பெற்றுள்ளது. மேலும் இளைஞர்களுக்காக I Love India என்ற வசனத்துடன் செல்ஃபி பாய்ண்ட் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் மற்றும் மார்க் மெட்ரோ நிறுவனமும் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த முன்னெடுப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

ஞாயிறு 15 ஆக 2021