மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 ஆக 2021

சுதந்திர தின விழா: பொதுமக்கள் நேரில் வர வேண்டாம்!

சுதந்திர தின விழா: பொதுமக்கள் நேரில் வர வேண்டாம்!

கொரோனா பரவல் காரணமாக கிராம சபை கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை (ஆகஸ்ட் 15) கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவைக் காண பொதுமக்கள் நேரில் வர வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய சுதந்திர தின திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15ஆம் தேதி காலை 9 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி சிறப்பிக்க இருக்கிறார். ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பார்கள்.

கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு இந்த ஆண்டு, பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினைக் கருத்தில்கொண்டு, கொரோனா தொற்று பரவலைத் தவிர்க்கும் விதமாக மாவட்டம் தோறும் சுதந்திரப்போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை செலுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி-ஒலிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தை தவிர்க்கும் வகையில், இந்தாண்டு பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் விழாவை காண நேரில் வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, வானொலியில், கண்டு, கேட்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரவு, பகலாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

உரிய அடையாள அட்டை இல்லாமல் சிம் கார்டுகள் வழங்க கூடாது என்று செல்போன் நிறுவனங்களுக்கும் போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர். வாடகை வீடுகளில் குடியிருப்போரை வீட்டு உரிமையாளர்கள் உரிய அடையாள சான்று வைத்திருக்கின்றனரா என்று சோதிக்கும்படியும் டெல்லி போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரிலும் சுதந்திர தினத்தை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இரவு ரோந்துப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எல்லையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

சனி 14 ஆக 2021