மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 ஆக 2021

16ஆம் தேதி முதல் சிறை கைதிகளை உறவினர்கள் சந்திக்கலாம்!

16ஆம் தேதி முதல் சிறை கைதிகளை உறவினர்கள் சந்திக்கலாம்!

கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறை கைதிகளை உறவினர்கள் நேரில் சந்தித்து பேசும் நடைமுறை 16ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படுவதாக சிறைத்துறை டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.

சிறைத்துறை டி.ஜி.பி. சுனில்குமார்சிங் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கொரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 27.4.2021 முதல் சிறை கைதிகளை அவர்களது உறவினர்கள் சிறைகளில் நேரில் சந்தித்து பேசும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. அதேவேளையில், செல்போனில் வீடியோ கால் எனப்படும் அழைப்பின் மூலம் சிறை கைதிகளை அவர்களின் உறவினர்கள் வீடியோவில் பார்த்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் சிறை கைதிகளை நேரில் சந்தித்து பேசும் நடைமுறையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று சிறை கைதிகளின் உறவினர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.

தற்போது கொரோனா பரவல் குறைந்து இயல்புநிலை திரும்பி வருவதாலும், சிறை கைதிகளின் நலனை கருத்தில் கொண்டும் சிறை கைதிகளை அவர்களது உறவினர்கள் நேரில் சந்தித்து பேசும் நடைமுறை 16ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது சில வழிமுறைகளைப் பின்பற்ற அனைத்து சிறை கண்காணிப்பாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதன்படி சிறை கைதிகளை சந்திக்க விரும்பும் பார்வையாளர்கள் அந்தந்த சிறைகளின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 24 மணி நேரத்துக்கு முன்பாக பதிவு செய்ய வேண்டும். சிறைக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக வர வேண்டும்.

ஒரு சிறை கைதியைப் பார்க்க அதிகபட்சம் இரண்டு பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஒரு சிறை கைதியை 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே நேரில் சந்திக்க அனுமதிக்கப்படும்.

சிறை கைதிகளை சந்திக்க விரும்பும் பார்வையாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழ் அல்லது மூன்று நாட்களுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர்த்து ஏனைய நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். சிறை கைதிகளை சந்திக்க அனுமதி கோரும் விண்ணப்பம், உறுதிப்படிவம் ஆகியவற்றை www.prisons.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் சிறையில் பார்வையாளர்கள் அறையின் நுழைவுவாயிலிலும் வழங்கப்படும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

-ராஜ்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

சனி 14 ஆக 2021