மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 ஆக 2021

அரசு பள்ளியில் சேர வந்த மாணவனுக்கு தலைமையாசிரியரின் வரவேற்பு!

அரசு பள்ளியில் சேர வந்த மாணவனுக்கு தலைமையாசிரியரின் வரவேற்பு!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளியில் சேரவந்த மாணவனுக்கு தலைமையாசிரியர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்துள்ளார்.

கொரோனா காலத்தில் அரசு பள்ளிகளில் புதிதாக சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களும் தனிப்பட்ட முறையில் பல்வேறு சலுகைகளை வழங்கி மாணவர்களை ஊக்குவிக்கின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக ஜெயக்குமார் என்ற ஞானராஜ் பணியாற்றி வருகிறார். இவர் அரசு பள்ளியில் புதிதாக சேரும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தன்னுடைய சொந்த செலவில் மாணவர்களுக்கு கடந்தாண்டு ஆன்ட்ராய்டு போனும், இந்தாண்டு தலா ரூ.1000ம் வழங்கி வருகிறார்.

வத்திராயிப்பு பகுதியில் தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர் ஸ்ரீஹரி, படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் சேர்வதற்காக இன்று வந்தார். தலைமையாசிரியர் ஜெயக்குமார், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி மகேஸ்வரிஆகியோர் மாணவன் ஸ்ரீஹரிக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.

மாணவர் சேர்க்கைக்கு பிறகு, ஸ்ரீஹரிக்கு பள்ளியில் சேர்ந்ததற்கான ஒப்புகைச் சீட்டு மற்றும் ரூ.1000மும் வழங்கினார்.

இதுகுறித்து தலைமையாசிரியர் ஜெயக்குமார் கூறுகையில், இங்கு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகளுக்கேற்ற அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மாணவர்களும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக ஆர்வமுடன் கற்கின்றனர். தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று கூறினார்.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

சனி 14 ஆக 2021