மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 ஆக 2021

இருவேறு கொரோனா தடுப்பூசி நல்லதா? : சைரஸ் பூனாவல்லா

இருவேறு கொரோனா தடுப்பூசி நல்லதா? : சைரஸ் பூனாவல்லா

இருவேறு கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வது ஆபத்தான முடிவாகும் என்று சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தியா உள்பட உலகம் முழுவதையும் ஆட்டி படைக்கும் கொரோனா தொற்றுக்கு எதிரான ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள தயக்கம் காட்டிய மக்கள், தற்போது ஆர்வமுடன் செலுத்திக் கொள்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் தடுப்பூசி தொடர்பான புதுப்புது தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதன்படி, சில வெளிநாடுகளில் முதல் டோஸாக ஒரு தடுப்பூசியையும், இரண்டாவது டோஸாக வேறு தடுப்பூசியையும் மக்களுக்கு செலுத்துவதன் மூலம் நல்ல பயன் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதையடுத்து, இந்தியாவிலும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை மாற்றி செலுத்திக்கொள்வது குறித்து ஆய்வு நடத்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு மையம் அனுமதியளித்தது. இதற்கான ஆய்வு, வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவல்லா கூறுகையில், “ இருவேறு கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வது மிகவும் ஆபத்தானது என்று நான் நினைக்கிறேன். அதுமட்டுமில்லாமல்,அதற்கு அவசியமும் ஏற்படவில்லை. தடுப்பூசிகளை மாற்றி செலுத்திக் கொள்வதினால் பயனளிக்கும் என்பது ஆய்வில் நிரூபிக்கப்படவில்லை. அப்படி இருவேறு தடுப்பூசிகளை செலுத்தி கொண்டதன் மூலமாக எதாவது தவறு நடந்தால், இரண்டு தடுப்பூசி தயாரிப்பாளர்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவார்கள். ஒரு தடுப்பூசி சரியாக இருக்கும்போது ஏன் மற்றதை கலந்து சிக்கலை ஏற்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

மேலும், ”இரண்டாவது டோஸை எடுத்துக் கொண்டவர்கள், ஆறு மாதங்களுக்குப் பிறகு மூன்றாவது டோஸையும் போட்டுக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஆறு மாதங்களுக்கு பிறகு உடலில் ஆன்டிபாடிகள் குறைய தொடங்கும். அதனால்தான் நானும், எங்கள் நிறுவனத்தின் ஊழியர்களும் மூன்றாவது டோஸை எடுத்துக் கொண்டோம்” என்று கூறினார்.

இரண்டு டோஸ்களுக்கு இடையிலான கால அவகாசத்தை ஒன்றிய அரசு நீட்டித்திருப்பது குறித்து விமர்சித்த அவர்,” இரண்டு டோஸ்களுக்கும் இடையில் இரண்டு மாத கால இடைவெளி போதுமானது. அப்படியான சூழ்நிலையில் இரண்டாவது டோஸ் போடுவதற்கு தேவையான மருந்து இல்லாத நிலையில், மூன்றாவது மாதத்திலாவது இரண்டாவது டோஸை செலுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

இதுவரை நாட்டில் 52 கோடியே 89 லட்சத்து 27,844 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

சனி 14 ஆக 2021