மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 ஆக 2021

சமீஹா பர்வீனை போலந்து அழைத்து செல்ல உத்தரவு!

சமீஹா பர்வீனை போலந்து அழைத்து செல்ல உத்தரவு!

போலந்தில் நடைபெறும் தேசிய அளவிலான தடகள போட்டியில் குமரி மாவட்ட வீராங்கனை சமீஹா பர்வீனை பங்கேற்க அனுமதிக்குமாறு தேசிய விளையாட்டு மேம்பாடு ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சமீஹா பர்வீன் தன்னுடைய ஆறு வயதில் அம்மை நோயால் 90 சதவீத செவித்திறனை இழந்தார். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், செவித்திறன் குறைபாடு உடையோருக்கான தடகளப் போட்டிகளில் பங்கேற்று 11 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில், சர்வதேச அளவிலான செவித்திறன் குறைபாடு உடையோருக்கான தடகளப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 23 முதல் 28 வரை போலந்து நாட்டில் நடைபெறவுள்ளது. இதற்காக டெல்லியில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்றில் தகுதிப்பெற்றும் இறுதிப்பட்டியலில் சமீஹா பர்வீன் பெயர் இடம்பெறவில்லை. தேர்வு செய்யப்பட்டவர்களில் பர்வீன் மட்டும் பெண் என்பதால் தேசிய விளையாட்டு ஆணையம் அவரை புறக்கணித்துள்ளது.

இந்நிலையில் போலந்து நாட்டில் நடைபெற இருக்கும் செவித்திறன் குறைபாடு உடையோருக்கான தேசிய தடகள போட்டியில் தன்னை புறக்கணித்ததை எதிர்த்தும், போட்டியில் அனுமதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீஹா பர்வீன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நேற்று(ஆகஸ்ட் 12) விசாரித்த நீதிபதி மகாதேவன், இதுகுறித்து ஆகஸ்ட் 13ஆம் தேதி பதிலளிக்க தேசிய விளையாட்டு ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டார்.

மீண்டும் இந்த வழக்கு இன்று(ஆகஸ்ட் 13) நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய விளையாட்டு ஆணையம் தரப்பில், தடகளத்தில் தகுதி சுற்றில் பர்வீன் 8வது இடம் பிடித்ததால் தான் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பெண் என்பதால் வாய்ப்பு மறுக்கப்பட்டது எனக் கூறுவது தவறு எனத் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி தடகள தகுதி சுற்றில் சமீஹா பர்வீன் 8வது இடம் பிடித்தாலும் பெண்கள் வரிசையில் அவர்தான் முதலிடத்தில் உள்ளார். அதனால், போலந்து நாட்டில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க சமீஹா பர்வீனை அழைத்துச் செல்ல வேண்டும் என உத்தரவிட்டார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வெள்ளி 13 ஆக 2021