மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 ஆக 2021

காரும் லாரியும் மோதியதில் குழந்தை உள்பட 6 பேர் பலி!

காரும் லாரியும் மோதியதில் குழந்தை உள்பட 6 பேர் பலி!

ஆரணி அருகே காரும்,லாரியும் நேருக்கு நேர் மோதியதில் குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர், செங்கம் அருகிலுள்ள புதூர் மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக மாருதி காரில் சென்றனர்.

கோயிலில் தரிசனத்தை முடித்துவிட்டு மீண்டும் இன்று(ஆகஸ்ட் 13) பிற்பகல் ஊருக்கு காரில் திரும்பி கொண்டிருந்தபோது முனியந்தாங்கல் அருகே காரின் முன் டயர் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே போரூரில் இருந்து கந்தவாசல் பகுதிக்கு நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் கோமதி(26) முனியம்மாள்(60) பரிமளா(21),ராதிகா(45) ஆகிய நான்கு பெண்களும், மூர்த்தி(68)என்பவரும், 3 மாத பெண் குழந்தையான நிஷாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தை பார்த்த உள்ளூர் மக்கள் அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

விபத்தில் படுகாயமடைந்த மாலதி(27), பூர்ணிமா(35), கலா(36), கார் டிரைவர் சசிக்குமார்(25) ஆகியோர் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் உடல் ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரத்துக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-வினிதா

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

வெள்ளி 13 ஆக 2021