மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 ஆக 2021

பொறியியல் படிப்பை கைவிடும் 14 பல்கலைகள்!

பொறியியல் படிப்பை கைவிடும் 14 பல்கலைகள்!

தமிழ்நாட்டில் உள்ள 14 தனியார் பல்கலைக்கழகங்கள் பொறியியல் படிப்புகளை கைவிட்டுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் பொறியியல் படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு தகுதியான வேலை கிடைப்பது அரிதாகவே உள்ளது. ஒரு காலத்தில் மாணவர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த பொறியியல் படிப்புக்கு கடந்த சில வருடங்களாக மந்தமாக இருந்து வருகிறது. இதற்கு பதிலாக கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் அதிகளவில் சேர்கின்றனர்.

தற்போது, நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுவரை பொறியியல் படிப்பில் சேர்வதற்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 80 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விரைவில் இவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில், இந்தாண்டு 50க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நடத்தவில்லை என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 தனியார் பல்கலைக்கழகங்களும் அடங்கும். பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை பிரிவில் சிவில், EEE, EIE, Power Electronics, Automobile Engineering, Nana Science and Technology, VLSI design and Architecture போன்ற படிப்புகளை கைவிடுவதாக தெரிவித்துள்ளன.

மாணவர்கள் இல்லாத சூழலில் புதிய படிப்புகளுக்கு பேராசிரியர்களை நியமித்து, செலவினங்கள் ஏற்படுகின்றன. அதனால் மாணவர்கள் சேராத படிப்புகளை கைவிட்டால், பிற படிப்புகளுக்கு போதிய பேராசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளன.

இந்த கோரிக்கையை ஏற்ற அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், மாணவர்கள் சேராத நிலையில் பொறியியல் படிப்புகளை கைவிட அனுமதி அளித்துள்ளது.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வெள்ளி 13 ஆக 2021