மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 ஆக 2021

மாற்றுத்திறனாளிகள் நலன்: விருது பெறும் மாவட்ட ஆட்சியர்கள்!

மாற்றுத்திறனாளிகள் நலன்: விருது பெறும் மாவட்ட ஆட்சியர்கள்!

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய மாவட்ட ஆட்சியர், மருத்துவர், வேலை வாய்ப்பளித்த தனியார் நிறுவனம், அரசு சாராத தொண்டு நிறுவனம், சேவைபுரிந்த சமூகப் பணியாளர், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய பிரிவினருக்கு விருதுகள் வழங்கப்படும்.

அதன்படி 2021ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள் வழங்குவதற்கென, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த நபர்கள் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த விண்ணப்பங்களை தேர்வுக் குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்து வழங்கிய ஆலோசனைப்படி, விருது பெறுவதற்கான நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, மாவட்ட ஆட்சியர்களுக்கான விருதுகள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இவர்களுக்கு தலா 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், 25,000 ரொக்கப்பணம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

சிறந்த சேவை புரிந்த தொண்டு நிறுவனம் என்ற பிரிவில் விருது பெறும் திருச்சியில் உள்ள ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டிக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம்,சான்றிதழ் மற்றும் ரூ.50,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

சமூகப் பணியாளராகத் தேர்வு செய்யப்பட்ட நாகர்கோவிலைச் சேர்ந்த மரிய அலோசியஸ் நவமணிக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

சிறந்த மருத்துவராகத் தேர்வு செய்யப்பட்ட சேலத்தைச் சேர்ந்த பூ.பத்மபிரியாவுக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவு வேலைவாய்ப்பு அளித்த நிறுவனமாகத் தேர்வு செய்யப்பட்ட சென்னை வி.ஆர்.யுவர் வாய்ஸ் நிறுவனத்துக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

சிறந்த மத்திய கூட்டுறவு வங்கியாக தேர்வு செய்யப்பட்ட ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்” என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

-வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வெள்ளி 13 ஆக 2021