மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 13 ஆக 2021

ஓணம் பண்டிகை: கொண்டாட தடை!

ஓணம் பண்டிகை: கொண்டாட தடை!

ஆகஸ்ட் 21ஆம் தேதி ஓணம் பண்டிகை வரவிருக்கும் நிலையில் கேரளாவில் பொது இடங்களில் பண்டிகைகளைக் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. நாடு முழுவதுமான மொத்த பாதிப்பில் கேரளாவில் மட்டும் 50 சதவிகித பாதிப்பு பதிவாகி வருகிறது.

இந்த நிலையில், ஓணம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து கொண்டாடப்படுகின்றன. இதனால், மக்கள் பெருமளவில் ஒன்றுசேர வாய்ப்புள்ளது. அதுவே தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் ஆபத்தும் உள்ளது.

இதனால், கேரள அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசு தலைமை செயலாளரும், மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவருமான வி.பி.ராய், “பண்டிகைகளையொட்டி, உள்ளூர் மட்டத்திலான கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளை பொது இடங்களில் கொண்டாடவோ, பெருமளவில் கூடவோ தடை விதிக்கப்படுகிறது.

புதிய பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் பரிசோதனை அதிகரிக்கப்படும். சபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரை 15ஆம் தேதி தொடங்குகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க, நாள் ஒன்றுக்கு 15,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இன்னும் தடுப்பூசி போடாதவர்கள் மற்றும் தடுப்பூசி போட இயலாதவர்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே செல்லலாம். இத்தகையவர்களுக்கு கடைக்காரர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்கலாம்” என்று கூறியுள்ளார்.

-ராஜ்

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

வெள்ளி 13 ஆக 2021