மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 ஆக 2021

ஊரே சேர்ந்து ரூ.5,000 கோடி டெபாசிட்: இந்தியாவின் பணக்கார கிராமம்!

ஊரே சேர்ந்து ரூ.5,000 கோடி டெபாசிட்: இந்தியாவின் பணக்கார கிராமம்!

கிராமங்கள் என்றாலே ஏழ்மை நிலையில் இருக்கும் குடிசைகளும், வேட்டி, துண்டுடன் இருக்கும் மனிதர்களே நம் நினைவுக்கு வருவார்கள். ஆனால், குஜராத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வங்கிகளில் ரூ.5,000 கோடி டெபாசிட் செய்து அசத்தியிருக்கிறார்கள். இந்தியாவின் பணக்கார கிராமம் என்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்கள்.

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் இருக்கும் மாதாபர் என்ற கிராமத்தைச் சேர்ந்த அதிகமானோர் அமெரிக்கா, இங்கிலாந்து, வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

அவர்கள் வெளிநாடுகளில் இருந்தாலும், தங்களது கிராமத்தில் உள்ள வங்கிகளில் என்.ஆர்.ஐ வங்கிக்கணக்கு திறந்து அதில் கோடிக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்துள்ளனர். இந்த கிராமத்தில் 17 வங்கிகள் தங்களது கிளையைத் திறந்துள்ளன. அதில் 5,000 கோடி ரூபாய்க்கும் மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதனால் மிகவும் பணக்கார கிராமமாகப் பார்க்கப்படும் மாதாபர் கிராமம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

புஜ் நகரத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்தக் கிராமத்தில் 7,600 குடியிருப்புகள் இருக்கின்றன. இந்தக் கிராம மக்கள் ஒவ்வொருவரின் சராசரி வங்கி டெபாசிட் விகிதம் ரூ.15 லட்சமாக இருக்கிறது. வெளிநாடுகளில் தங்கி இருக்கும் இந்தக் கிராம மக்கள், தங்களது சொந்தங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புவதோடு, தங்களது சேமிப்பையும் தங்களது ஊரில் உள்ள வங்கிக் கணக்குகளில்தான் பராமரிக்கின்றனர்.

இந்தக் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் தலா ஒருவராவது வெளிநாடுகளில் இருப்பார்கள். லண்டனில் வசிக்கும் இந்தக் கிராம மக்கள், ஒன்று சேர்ந்து அங்கு தனி அமைப்பை ஏற்படுத்தி கிராமத்துக்கும், லண்டனுக்கும் இடையே உள்ள உறவை ஒருங்கிணைத்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் வசிக்கும் பட்டேல் இனத்தை சேர்ந்தவர்களில் 62 சதவிகிதம் பேர் வெளிநாடுகளில் இருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கிராமத்தில் ரகுவன்ஷி ஸ்டூடியோ என்ற பெயரில் ஸ்டூடியோ வைத்திருக்கும் வினோத் கிராய் என்பவர் இதுகுறித்து பேசுகையில், “எங்களது கிராமத்தில் 30 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் வெளிநாடுகளில் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் கிராமத்தில் உள்ள வங்கிகளில் என்.ஆர்.ஐ கணக்கு வைத்திருக்கின்றனர். எனது குடும்பத்தில் எனது சகோதரர் உட்பட ஆறு பேர் லண்டனில் வசிக்கின்றனர். நான் வெளிநாடு போக விரும்பாமல் இங்கேயே இருக்கிறேன். வெளிநாடுகளில் இருக்கும் எங்களது கிராம மக்கள் ஹோலி பண்டிகை மற்றும் ராம நவமி போன்ற விழாக்களுக்கு சொந்த ஊருக்கு வருவதுண்டு. கிராமத்தில் உள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயம் செய்கின்றனர். விளைபொருட்களை பெரும்பாலும் மும்பைக்கு அனுப்பி வர்த்தகம் செய்கின்றனர்’’ என்கிறார் பெருமையாக.

-ராஜ்

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

3 நிமிட வாசிப்பு

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

4 நிமிட வாசிப்பு

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

3 நிமிட வாசிப்பு

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

வியாழன் 12 ஆக 2021