மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 ஆக 2021

மாணவர்களுக்கு தடையின்றி சத்துணவு வழங்க உத்தரவு!

மாணவர்களுக்கு தடையின்றி சத்துணவு வழங்க உத்தரவு!

பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மற்றும் கல்வி தொலைகாட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதிலாக அந்த ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி துறை ஆணையர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் சுமார் 50 லட்சம் மாணவர்கள் மதிய உணவு திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். தற்போது, கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்களின் மதிய உணவை பெற்று கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால் சில பின்தங்கிய மாணவர்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய குழந்தை தொழிலாளர்களாக மாறும் வாய்ப்பு உள்ளது. சில பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலையும் ஏற்படுகிறது. இதனால் மாணவர்களின் இடைநிற்றல் கணிசமாக அதிகரிப்பதுடன் அவர்களின் எதிர்காலமும் வெகுவாக பாதிக்கிறது.

மேலும் , பள்ளிக் குழந்தைகள் யாரேனும் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனரா என்பதை ஆய்வு செய்து அலுவலர்கள் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியரின் மூலம் அவர்கள் மீண்டும் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அதுபோன்று, தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் மதிய உணவு திட்டத்தில் ரொட்டி மற்றும் முட்டையும் சேர்த்து பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

வியாழன் 12 ஆக 2021