மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 ஆக 2021

ஒன்றிய அரசின் விருது பெறும் தமிழக காவலர்கள்!

ஒன்றிய அரசின் விருது பெறும் தமிழக காவலர்கள்!

குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்தியதற்காக ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரின் விருதை பெறுவதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த 8 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்திய காவலர்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது வழங்கப்படும்.

இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் இன்று(ஆகஸ்ட் 12) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஒன்றிய உள்துறை அமைச்சரின் சிறந்த புலன் விசாரணை விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 152 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதில் சிபிஐயில் 15 பேர், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா காவல்துறையிலிருந்து தலா 11 பேர், உத்தரபிரதேசத்தில் இருந்து 10 பேர், கேரளா மற்றும் ராஜஸ்தான் காவல்துறையில் இருந்து 9 பேர், தமிழ்நாட்டில் 8 பேர், பீகாரில் 7 பேர், குஜராத்தில் 6 பேர், கர்நாடகாவில் 6 பேர், டெல்லியில் 6 பேர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 28 பெண் போலீஸ் அதிகாரிகள் உள்ளனர்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் சரவணன், அன்பரசி, கவிதா, ஜெயவேல், கலைச்செல்வி, மணிவண்ணன், சிதம்பர முருகேசன், கண்மணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் ...

3 நிமிட வாசிப்பு

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் போக்குவரத்து மாற்றம்!

வியாழன் 12 ஆக 2021