மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 ஆக 2021

ரிலாக்ஸ் டைம்: அவல் - கேரட் தோசை!

ரிலாக்ஸ் டைம்: அவல் - கேரட் தோசை!

அன்றைய நாளுக்கான ஆற்றலை அளிப்பதில் காலை உணவுக்கு முக்கிய பங்கு உண்டு. காலை உணவைத் தவிர்ப்பதால் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு உடல் பருமன் அதிகரிக்கும். காலை உணவைத் தவிர்ப்பவர்கள் ரிலாக்ஸ் டைமில் இந்த சத்தான தோசை செய்து சாப்பிடலாம். உடனடி எனர்ஜியைப் பெறலாம்.

எப்படிச் செய்வது?

அரை கப் பச்சரிசியை நன்கு ஊறவைக்கவும். சுத்தம் செய்த அரை கப் அவலை தேவையான அளவு மோரில் ஊறவைத்து, ஊறிய அரிசி, ஒரு டேபிள்ஸ்பூன் கேரட் துருவல், நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும். லேசாகப் புளித்ததும், ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து, தோசைக்கல்லில் தோசைகளாக வார்க்கவும். துருவிய கேரட்டை மேற்புறம் தூவி சாப்பிடவும்.

சிறப்பு

பச்சரிசியிலும் அவலிலும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரும். கேரட்டில் உள்ள கரோட்டினாய்டு கண்களுக்கும் நரம்புகளுக்கும் நல்லது. வெங்காயத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்புச்சக்தியைக் கூட்டும்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வியாழன் 12 ஆக 2021