மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 ஆக 2021

சாலையோர பட்டாசு கடைகளுக்கு அனுமதி இல்லை!

சாலையோர பட்டாசு கடைகளுக்கு அனுமதி இல்லை!

மதுரையில் தீபாவளி பண்டிகையையொட்டி, சாலையோர பட்டாசு கடைகளுக்கு அனுமதி இல்லை என்று மதுரை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் தற்காலிக பட்டாசுக் கடைகளை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. கடை அமைப்பதற்கு தேவையான 14 வகையான ஆவணங்களை இணைத்து, 1000 ரூபாய் கட்டணத்துடன் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் காவல் ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும் என்று காவல் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடை அமைப்பதற்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு விசாரணைக்கு பின்பு உரிமம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சாலையோரத்தில் பட்டாசு கடைகளை அமைக்க அனுமதி இல்லை என்று மதுரை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

-வினிதா

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

வியாழன் 12 ஆக 2021