மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 ஆக 2021

வெற்றிகரமாகச் சென்ற ‘ஜிஎஸ்எல்வி எஃப்-10’ இலக்கை எட்டவில்லை!

வெற்றிகரமாகச் சென்ற ‘ஜிஎஸ்எல்வி எஃப்-10’ இலக்கை எட்டவில்லை!

பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தபடி ‘ஜிஎஸ்எல்வி எஃப்-10’ ராக்கெட் இன்று வானில் சீறிப்பாய்ந்தது. ஆனால், ராக்கெட்டில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளதால் இலக்கை எட்டவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்புக்காக 2,268 கிலோ எடை கொண்ட ஈஓஎஸ்03 என்ற செயற்கைகோளை வடிவமைத்தது. இதை ‘ஜிஎஸ்எல்வி எஃப்-10’ ராக்கெட்டில் பொருத்தி, இன்று (ஆகஸ்ட் 12) காலை 5.43 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.

ராக்கெட்டுக்கு உந்து சக்தியாக உள்ள எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்தது. தொடர்ந்து ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 14 மணி நேர ‘கவுன்ட்டவுன்’ நேற்று பிற்பகல் 3.43 மணிக்குத் தொடங்கியது. முன்னதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் ராக்கெட் மற்றும் செயற்கைகோள்களை தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். தொடர்ந்து ‘கவுன்ட்டவுனை’ முடித்து கொண்டு காலை 5.43 மணிக்கு ராக்கெட் விண்ணை நோக்கி தீ பிழம்பை கக்கியவாறு சீறிபாய்ந்தது.

இந்த ராக்கெட்டில் முதன்முறையாக வெப்பத்தில் இருந்து அதிக எடை கொண்ட செயற்கைகோள் மற்றும் அதில் உள்ள மின்னணு பொருட்களை பாதுகாப்பதற்காக ராக்கெட்டின் கூம்பு வடிவிலான முகப்பு பகுதியில் தனியாக வெப்பத்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் திட்டமிட்ட இலக்கில் செயற்கைகோளை நிலை நிறுத்தும் வரை செயற்கைகோள்களை இந்த வெப்பத்தகடுகள் பாதுகாத்து கொள்கிறது.

கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் திட்டமிட்டபடி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியாத நிலை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்துக்கு (இஸ்ரோ) ஏற்பட்டது. நடப்பு ஆண்டில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ‘பிஎஸ்எல்வி சி-51’ ராக்கெட் மட்டும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

தற்போது விண்ணில் செலுத்தப்படுவது ஜிஎஸ்எல்வி ரகத்தில் 14ஆவது ராக்கெட்டாகும். கொரோனா பரவல் காரணமாக இன்று பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ‘ஜிஎஸ்எல்வி எஃப்-10’ ராக்கெட்டில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் கிரையோஜெனிக் எஞ்ஜின் பகுதியில் ஏற்பட்ட சிக்கலால் இந்தத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

வியாழன் 12 ஆக 2021