மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 ஆக 2021

சென்னை மக்களுக்கு மாநகராட்சி விடுக்கும் எச்சரிக்கை!

சென்னை மக்களுக்கு மாநகராட்சி விடுக்கும் எச்சரிக்கை!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கட்டடக் கழிவுகளைக் கொட்டும் நபர்களுக்கு ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

சென்னை மாநகராட்சியைத் தூய்மையாகவும், அழகாகவும் வைத்திருக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. க்ளீன் சென்னை என்ற பெயரில் பொது இடங்களில் ஓட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. வீடு வீடாகச் சென்று சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மறுசுழற்சி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் வாகனக் கழிவுகள் மூலம் உலோக சிற்பங்கள் செய்து மக்களின் பார்வைக்கு பொது இடங்களில் காட்சிப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 10) சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உருவாக்கப்படும் கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துவதற்கு ஏதுவாக கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகங்களில் தலா 400 மெட்ரிக் டன் திறன் கொண்ட மறுபயன்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தங்களால் குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டடக் கழிவுகளைக் கொட்டுவதற்கு ஏதுவாக மாநகராட்சியின் சார்பில் 15 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுமக்கள் கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை இந்த இடங்களில் மட்டுமே கொண்டு சேர்க்க வேண்டும். இதை மீறும் நபர்களின் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 மற்றும் துணை விதிகள் 2019இன்படி பொது இடங்களில் ஒரு டன் அளவுக்குக் குறைவாகக் கட்டடக் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது 2,000 ரூபாயும், ஒரு டன் அளவுக்கு அதிகமாகக் கட்டடக் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது 5,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.

சென்னையைத் தூய்மையாகப் பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்குப் பொதுமக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

புதன் 11 ஆக 2021