மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 ஆக 2021

ஒரு கிலோ முருங்கைக்காய் 50 பைசா!

ஒரு கிலோ முருங்கைக்காய் 50 பைசா!

ஒரு கிலோ முருங்கைக்காய்கள் 50 பைசாவுக்கு விலை பேசப்படும் அளவுக்கு முருங்கை கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தோட்டப்பயிராக முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தா.பழூர், காரைக்குறிச்சி, இருகையூர், நாயகனைப்பிரியாள், அணைக்குடம் பொற்பொதிந்தநல்லூர், சோழமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் தீவிர முருங்கை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உற்பத்தி செய்த முருங்கைக்காய்கள் மூட்டைகளாக கட்டப்பட்டு உள்ளூர் வியாபாரிகள் மூலமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு அனுப்பப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ முருங்கைக்காய் ஒரு ரூபாய்க்கும் குறைவான விலையில் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். குறிப்பாக கடந்த வாரத்தில் ஒரு கிலோ முருங்கைக்காய் 50 பைசாவுக்கு விலை பேசப்பட்டதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

“ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு பருவத்தில் முருங்கை விவசாயம் செய்ய ரூ.22,000 முதல் ரூ.25,000 வரை செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.10-க்கு குறைவாக கொள்முதல் செய்யப்பட்டால் நஷ்டத்தைச் சந்திக்கும் சூழல் ஏற்படும். இந்த நிலையில் 50 பைசாவுக்கு முருங்கைக்காய்கள் விலை பேசப்படுவதால் நிலைகுலைந்துள்ளோம். தற்போது விற்கும் விலைக்கு 600 கிலோ முருங்கைக்காய் விற்பனை செய்தால் மட்டுமே ஒரு தொழிலாளிக்கு கூலி வழங்க முடியும். எனவே அரசு முருங்கைக்காய்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்” என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது முருங்கை மரத்தில் இருந்து காய்களைப் பறிக்கும் பணியை விவசாயிகள் நிறுத்தி வைத்துள்ளனர். முருங்கைக்காய்கள் பறிக்கப்படாததால் மரத்திலேயே சடை, சடையாக தொங்குகின்றன.

-ராஜ்

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

புதன் 11 ஆக 2021