மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 ஆக 2021

பொள்ளாச்சி பாலியல் வழக்கை முடிக்க கெடு!

பொள்ளாச்சி பாலியல் வழக்கை முடிக்க கெடு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை 6 மாதத்தில் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இவ்வழக்கில், திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை அடுத்து, அதிமுக நகர மாணவரணிச் செயலாளராக இருந்த அருளானந்தம் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அருளானந்தம் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் ஏற்கனவே இந்த வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், இதில் சில விளக்கங்களை நீதிமன்றம் கேட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. சிபிஐயில் ஆட்கள் பற்றாக்குறையால் வழக்கு விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது தமிழக அரசு தரப்பில் இவ்வழக்கு விசாரணையை சிபிஐ விரைந்து முடிக்கத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறப்பட்டது.

இவ்வழக்கில் இன்று (ஆகஸ்ட் 11) தீர்ப்பு வழங்கிய நீதிபதி தண்டபாணி, ஜாமீன் கேட்ட அருளானந்தத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

மேலும், பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க, கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டதோடு, சிபிஐயின் விசாரணைக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசியை நியமித்தும் உத்தரவிட்டார்.

-பிரியா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

புதன் 11 ஆக 2021