மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 ஆக 2021

உங்கள் பெயர் நீரஜா?

உங்கள் பெயர் நீரஜா?

நீரஜ் என்ற பெயர் உள்ளவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று கரூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அறிவித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா முதல் முயற்சியிலேயே 87 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்தார். பின்னர் இரண்டாவது முயற்சியில் அதைவிட அதிகமாக 87.58 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார். இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து பாராட்டும், பரிசு மழையும் குவிந்து கொண்டிருக்கிறது. நீரஜை கெளரவிக்கும் விதமாக ஆகஸ்ட் 7ஆம் தேதி ஈட்டி எறிதல் தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையில் சலுகை அளித்து வருகின்றனர்.

குஜராத்தின் பரூச் நகரில் பெட்ரோல் பம்ப் வைத்திருக்கும் அயூப் பதான் என்பவர் நீரஜ் என்ற பெயரை வைத்திருப்பவர்களுக்கு ரூ.501 வரைக்கும் இலவச பெட்ரோல் வழங்கப்படும். இந்த சலுகையைப் பெற தங்கள் பெயர் உள்ள அடையாள அட்டையை கொண்டு வந்தால் போதும் என்று அறிவித்திருந்தார்.

அதுபோன்று தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் சுங்ககேட் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் “நீரஜ்” என்ற பெயர் வைத்திருப்பவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும். இந்த சலுகையை பெற ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

புதன் 11 ஆக 2021