மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 ஆக 2021

ரிலாக்ஸ் டைம்: அன்னாசி ஸ்வீட் கார்ன் சாலட்

ரிலாக்ஸ் டைம்: அன்னாசி ஸ்வீட் கார்ன் சாலட்

தினமும் ஏதாவது ஒரு சாலட் சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் உங்களைப் புத்துணர்ச்சியுடன் வைக்கும். தற்போதைய சூழ்நிலையில் இந்த சாலட்டில் உள்ள சத்துகள் உடலில் உள்ள சுரப்பிகளின் செயல்திறனை ஒழுங்குப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

எப்படிச் செய்வது?

ஒரு எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து சாறு எடுக்கவும். அரை டீஸ்பூன் மிளகு, நான்கு வால்நட், ஒரு பல் பூண்டு, ஐந்து துளசி இலை இவற்றை மிக்ஸியில் போட்டு, எலுமிச்சைச்சாறு கலந்து நைஸாக அரைத்து சாஸ் போல் தயாரிக்கவும். 100 கிராம் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி, அத்துடன் 100 கிராம் ஸ்வீட் கார்ன் சேர்க்கவும். இதில் தேவையான அளவு உப்பு, சாஸ் (அரைத்த விழுது) சேர்த்துக் கலக்கியோ அல்லது அன்னாசிப்பழம், சோளத்தைச் சாஸில் முக்கியோ சாப்பிடலாம்.

சிறப்பு

இந்த சாலட் மூளைச் செல்களைத் தூண்டி, உற்சாகத்தைத் தரும். இதயத் தசைகளின் செயல்திறனை மேம்படுத்தும். மிளகு, பூண்டு, துளசி என உடலுக்கு நலம்தரும் மூலிகை நிறைந்த மருத்துவ சாலட் இது.

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

புதன் 11 ஆக 2021