மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 ஆக 2021

கிச்சன் கீர்த்தனா: ஆலூ போஹா

கிச்சன் கீர்த்தனா: ஆலூ போஹா

வட இந்திய உணவுகளில் முக்கிய இடம்பிடிப்பது உருளைக்கிழங்கு. உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதய நோயாளிகளுக்கும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது. உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிக அளவிலும், புரதச்சத்து ஓரளவும் உள்ளது. உருளைக்கிழங்கை அடிப்படையாக வைத்து செய்யப்படும் இந்த வட இந்திய ஆலூ போஹா அனைவருக்கும் ஏற்றது.

என்ன தேவை?

கெட்டி வெள்ளை அவல் - ஒரு கப்

பச்சை மிளகாய் - 3 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

உருளைக்கிழங்கு - ஒன்று (தோல் உரித்து, வேக வைத்து சிறிய சதுரமாக வெட்டிக்கொள்ளவும்)

கடுகு - ஒரு டீஸ்பூன்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - தேவையான அளவு

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

வறுத்த வேர்க்கடலை - இரண்டு டேபிள்ஸ்பூன்

சர்க்கரை - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அவலை ஒரு வடி கூடையில் கொட்டி, கழுவி பத்து நிமிடங்கள் தண்ணீரை வடிய விடவும். கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள்தூள், பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு இதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். பின்னர் இக்கலவையில் ஊறிய அவல், வறுத்த வேர்க்கடலை, உப்பு, சர்க்கரை, எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறினால் ஆலூ போஹா ரெடி.

நேற்றைய ரெசிப்பி: ஆலூ சாட்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

புதன் 11 ஆக 2021