மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 ஆக 2021

சுதந்திர தினம் - பிளாஸ்டிக் கொடிகளைத் தவிர்க்கவும்: ஒன்றிய அரசு!

சுதந்திர தினம் - பிளாஸ்டிக் கொடிகளைத் தவிர்க்கவும்: ஒன்றிய அரசு!

சுதந்திர தினத்தன்று பிளாஸ்டிக்கால் ஆன தேசியக் கொடிகள் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘தேசியக்கொடி மீது மக்கள் அன்பும், மரியாதையும் வைத்து உள்ளனர். சுதந்திரம் மற்றும் குடியரசு தின நாட்களில் தேசியக்கொடியை தங்கள் சட்டையில் அணிந்து செல்வது, மக்களின் வழக்கமாக உள்ளது.

தேசியக் கொடிக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். ஆனால், பிளாஸ்டிக் கொடிகளில் அது சாத்தியமாவது இல்லை. பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணில் மக்குவதற்கு காலதாமதமாகும். நீர் வளத்தையும் பாதிக்கும். அதனால் பிளாஸ்டிக்கால் தேசியக் கொடிகள் தயாரிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். காகிதங்களால் தேசியக்கொடிகளை தயாரிக்க உத்தரவிட வேண்டும்.

சுதந்திர தினம் தவிர அரசு விழாக்கள், விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் பிளாஸ்டிக் தேசியக் கொடிகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

செவ்வாய் 10 ஆக 2021