மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 ஆக 2021

அண்ணா பல்கலைக்கு புதிய துணைவேந்தர்!

அண்ணா பல்கலைக்கு புதிய துணைவேந்தர்!

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக முனைவர் ஆர்.வேல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த எம்.கே.சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து புதிய துணைவேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்காக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் துணைவேந்தர் ஜெகதீஷ் குமார், சென்னை பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஷீலா ராணி சுங்கத் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

அண்ணா பல்கலையின் துணைவேந்தர் பதவிக்கு நாடு முழுவதும் இருந்து 160 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் தேர்வு செய்யப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் ஐந்து பேராசிரியர்கள், சென்னை ஐஐடியின் இரண்டு பேராசிரியர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு நேற்று(ஆகஸ்ட் 9) நேர்காணல் நடைபெற்றது. அதில் மூன்று பேர் கொண்ட பெயர் பட்டியல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்த முனைவர் ஆர்.வேல்ராஜ், அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமனம் செய்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.இவர் துணைவேந்தராக 3 ஆண்டுகள்வரை பதவி வகிப்பார்.

முனைவர் ஆர்.வேல்ராஜ்

ஆசிரியர் பணியில் 33 ஆண்டுகள் அனுபவம் கொண்ட வேல்ராஜ் 193 ஆய்வு கட்டுரைகளை 53 தலைப்புகளில் வெளியிட்டுள்ளார். அதில் 29 கட்டுரைகள் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் இயக்குநர், துணை இயக்குநர், துறைத் தலைவர் என 14 ஆண்டுகள் பணியாற்றிய இவர் மெக்கானிக்கல் பிஎச்டி துறையில் 3 படிப்புகளையும், முதுகலை பொறியியல் துறையில் 9 புதிய படிப்புகளையும் அறிமுகம் செய்துள்ளார்.

ரூ.17.85 கோடி மதிப்புள்ள 15 ஆராய்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியுள்ள இவர், 33 பிஎச்டி மாணவர்கள் மற்றும் இரண்டு எம்.எஸ் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.

கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

செவ்வாய் 10 ஆக 2021