மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 ஆக 2021

வீடுகளில் மாடு,நாய் வளர்த்தால் வரி!

வீடுகளில் மாடு,நாய் வளர்த்தால் வரி!

மதுரையில் வீடுகளில் ,மாடு,குதிரை,எருமை, நாய் உள்ளிட்ட கால்நடை விலங்குகளை வளர்ப்போர்கள் ஆண்டுக்கு பத்து ரூபாய் செலுத்தி உரிமம் பெற வேண்டும் என மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் பெரும்பாலான நகரங்களில் ஆடு,மாடு,குதிரை உள்ளிட்ட விலங்குகளை அதன் உரிமையாளர்கள் முறையாக கவனிக்காமல் விட்டுவிடுவதால், அவைகள் சாலைகளில் அலட்சியமாக சுற்றி திரிகின்றன. இதனால் சாலைகளில் விபத்து ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், கால்நடை விலங்குகளும் காயமடைகின்றன. இதற்கு தீர்வு காண வேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மாநகராட்சி இதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மதுரை மாநகராட்சியில் இறைச்சி, மீன் கடைகள் , செல்லபிராணி விற்பனை நிலையம் ஆகிய கடைகளின் அளவுக்கு (ஒரு சதுர அடிக்கு ஆண்டுக்கு ரூ.10 ) ஏற்றபடி கட்டணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனுமதிக்கப்படாத இடங்களில் விற்பனைக்காக ஆடு, மாடு வதை செய்தால் ரூ.5,000 அபராதமும், தெருக்களில் ஆடு, மாடு, குதிரைகளை அலட்சியமாக விடும் உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம் மற்றும் அதற்கு தினசரி பராமரிப்பு கூலியாக 200 ரூபாயும், தெருக்களில் சுகாதாரசீர் கேடு விளைவிக்கும் வகையில் நாய்களை விட்டால் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும்.

வீடுகளில் நாய், மாடு, எருமை, குதிரை வளர்த்தால் மாநகராட்சியில் ஆண்டுக்கு 10 ரூபாய் பதிவுக்கட்டணமாக செலுத்த வேண்டும் .

மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் திடக்கழிவுகளை கொட்டும் இறைச்சி கடைகளுக்கு ரூ. 2000 அபராதம் விதிக்கப்படும். இந்த அபராத விதிப்பு தொடர்பாக 15 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை எழுத்துபூர்வமாக மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் சுகாதார சீர்கேடுகளை தடுக்கும் வகையிலும், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்றும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

செவ்வாய் 10 ஆக 2021