மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 ஆக 2021

இன்றே கடைசி நாள்……

இன்றே கடைசி நாள்……

தமிழ்நாட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் இளநிலைப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்றே(ஆகஸ்ட் 10) கடைசி நாளாகும்.

தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2021-22ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டில் சேர்வதற்கு www.tngasa.in, www.tngasa.in என்ற இணையதளம் மூலம் ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இதுவரை சுமார் 2 லட்சத்து 80 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் மூலம் விண்ணப்பம் செய்த மாணவர்களின் மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டு, தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்த கல்லூரிக்கு தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட பின்பு, அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் இன்றே கடைசி நாளாகும். ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதிவரை நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

செவ்வாய் 10 ஆக 2021