மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 ஆக 2021

அரசின் கடனில் தன் பங்கை செலுத்த வந்த காந்தியவாதி!

அரசின் கடனில் தன் பங்கை செலுத்த வந்த காந்தியவாதி!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழ்நாடு அரசு மீது இருக்கும் கடனில் தன் குடும்பத்தின் பங்கான ரூ.2.63 லட்சம் கடன் தொகையை செலுத்துவதற்கான காசோலையை வழங்க கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று நிதிநிலை அறிக்கை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதில், தமிழ்நாடு அரசுக்கு ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2,63,976 கடன் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாமக்கல் அருகே மேற்கு பாலப்பட்டியை சேர்ந்த காந்தியவாதியான ரமேஷ் தியாகராஜன் என்பவர் இன்று(ஆகஸ்ட் 10) நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். கோட்டாட்சியர் கோட்டைகுமாரை சந்தித்த ரமேஷ், தமிழ்நாடு அரசு மீது இருக்கும் கடனில் தன்னுடைய குடும்பத்தின் பங்கான ரூ.2.63 லட்சம் கடன் தொகைக்குரிய காசோலை அட்டையை வழங்கினார். இதை வாங்க மறுத்த கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வழங்குமாறு தெரிவித்துவிட்டார். மாவட்ட ஆட்சியரும் ரமேஷிடம் இருந்து காசோலையை வாங்க மறுத்துவிட்டார்.

இதுகுறித்து ரமேஷ் தியாகராஜன் கூறுகையில், “ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத்திற்கான கடன் தொகையை செலுத்துவதற்கு முன்வர வேண்டும். தமிழ்நாடு அரசின் கடனை முழுவதுமாக அடைக்க வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நான் முதலில் கடனை செலுத்த வந்தேன். இது ஒரு முன் மாதிரியாக அமையும்” என்று கூறினார்.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

செவ்வாய் 10 ஆக 2021