மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 ஆக 2021

பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!

பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழ்நாட்டில் பள்ளிகளை திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிற்குள்ளே இருப்பதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர், அதனால் விரைவில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகளை திறப்பது குறித்து கடந்த வாரம் முதல்வர் தலைமையில் ஆலோசனை நடந்தது. அதன்படி, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதையடுத்து பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் மற்றும் கல்வி அதிகாரிகள் நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

அதன்படி, சுழற்சி முறையில் 50 சதவிகித மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரவழைத்து வகுப்புகள் நடத்துவது, வகுப்பு இடைவேளையின்போது அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் இடைவேளையின் நேரமும் மாணவர்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வகுப்பறைகளில் மாணவர்கள் இருக்கைகள் இடைவெளியுடன் அமைக்கப்படும். உணவு இடைவேளையின் போது மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. பள்ளி வளாகங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு நுழைவு வாயிலில் வெப்பநிலை பரிசோதனை செய்தல் போன்றவை முறையாக பின்பற்றுதல். சானிடைசர், கையுறைகள், முகக்கவசம் போன்றவற்றை மாணவர்கள் அணிந்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளை திறப்பதற்கு இன்னும் 20 நாட்களே உள்ளதால், பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் வழிகாட்டு நெறிமுறைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

-வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

செவ்வாய் 10 ஆக 2021