மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 ஆக 2021

திருப்பதி: ஜூலை மாத உண்டியல் வருமானம் ரூ.55.5 கோடி!

திருப்பதி: ஜூலை மாத உண்டியல் வருமானம் ரூ.55.5 கோடி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மாத உண்டியல் வருமானம் ரூ.55.5 கோடி என்ற தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஜூலை மாதம் கிடைத்த வருமானம் குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜூலை மாதம் 5 லட்சத்து 32,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஜூலை மாத உண்டியல் வருமானமாக மொத்தம் ரூ.55 கோடியே 58 லட்சம் கிடைத்தது. இ-உண்டியல் மூலமாக ரூ.3 கோடியே 97 லட்சம் கிடைத்தது.

35 லட்சத்து 26,000 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 7 லட்சத்து 13,000 பக்தர்களுக்கு தறிகொண்டா வெங்கமாம்பா அன்னதானக் கூடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. 2 லட்சத்து 55,000 பக்தர்கள் தங்களின் தலைமுடியைக் காணிக்கையாக வழங்கி உள்ளனர்.

அதேபோல் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கடந்த ஜூலை மாதம் இ-உண்டியல் மூலமாக ரூ.15 லட்சம் கிடைத்தது’ என்று தெரிவித்துள்ளது.

வழக்கமாக திருமலையில் நாள் ஒன்றுக்கு 60,000 முதல் ஒரு லட்சம் வரை பக்தர்கள் தரிசனம் செய்வர். ஆனால் கொரோனா தொற்று காரணமாக இதுவரை சர்வ தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கொரோனா தொற்று முழுமையாகக் குறைந்தால் மட்டுமே சர்வ தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சர்வ தரிசனமும் அனுமதிக்கப்பட்டால் உண்டியல் வருமானம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-ராஜ்

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

திங்கள் 9 ஆக 2021