மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 ஆக 2021

டெல்லி: இன்று முதல் வாராந்திர சந்தைகள் திறப்பு!

டெல்லி: இன்று முதல் வாராந்திர சந்தைகள் திறப்பு!

டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 9) முதல் வாராந்திர சந்தைகள் திறக்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில வாரங்களாக டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை இரட்டை இலக்க எண்களில் பதிவாகி வருவது அங்குள்ள மக்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்துள்ளது. தொற்று பரவல் கணிசமாக குறைந்துள்ளதால், டெல்லியில் பெரும்பாலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா, “வாராந்திர சந்தைகளை நம்பி லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் உள்ளது. இதை கருத்தில்கொண்டு வாராந்திர சந்தைகளை மீண்டும் திறப்பதற்கு டெல்லி அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்” என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

டெல்லியில் வாராந்திர சந்தைகளுக்கு அனுமதி அளிக்கக் கோரி தெருவோர வியாபாரிகள் சங்கமும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) முதல் வாராந்திர சந்தைகள் திறக்க அனுமதி அளிக்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், “ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு வாராந்திர சந்தைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் , ஒவ்வொருவரின் ஆரோக்கியமும் முக்கியம். ஆகவே, சந்தைகள் திறந்த பிறகு கொரோனா தடுப்பு விதிகளை அனைத்து தரப்பினரும் தவறாது பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்

-ராஜ்

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

திங்கள் 9 ஆக 2021