மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 ஆக 2021

பட்டிமன்ற புகழ் பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி!

பட்டிமன்ற புகழ் பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி!

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது, அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டிமன்றம் மூலம் தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் பாரதி பாஸ்கர். அவரது பேச்சுக்கு எனத் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் பாரதிபாஸ்கர் சாலமன் பாப்பையாவின் குழுவில் பேசி வந்தார்.

குறிப்பாக பாரதி பாஸ்கருக்கும் மற்றொரு பேச்சாளரான ராஜா இருவருக்கும் இடையே போட்டியாகத் தான் இருக்கும் . இருவரது பேச்சுக்கும் அரங்கில் உள்ளவர்கள் கரவொலி எழுப்பி ரசிப்பார்கள்.

இந்த நிலையில் பாரதி பாஸ்கருக்கு இன்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து நடிகை குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் ”அழகிய தமிழ் மற்றும் அழகான புன்னகையுடன் நன்கு அறியப்படும் பாரதி பாஸ்கருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரது மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அவர் மிக விரைவாகக் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“நேற்று மதியமே பாரதி பாஸ்கருக்குத் தலைவலி ஏற்பட்டுள்ளது. இரவில் வலி மிக அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில், மூளை பகுதியில் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனஸ்தீசியா கொடுக்கப்பட்டதால் மயக்கத்தில் உள்ளார். விரைவில் நலம் பெறுவார்” என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

-பிரியா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

திங்கள் 9 ஆக 2021