மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 ஆக 2021

பப்ஜி மதன் வழக்கில் அரசுக்கு உத்தரவு!

பப்ஜி மதன் வழக்கில் அரசுக்கு உத்தரவு!

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பப்ஜி மதன் தொடர்ந்த வழக்கில் சென்னை காவல் ஆணையர், தமிழக அரசு பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விபிஎன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடியது மட்டுமின்றி, யூடியூபில் ஆபாசமான பேச்சுகளைப் பேசி காணொளிகளைப் பதிவிட்டு வந்த பப்ஜி மதன் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் அவர்மீது கடந்த ஜூலை 6ஆம் தேதி குண்டர் சட்டம் பயந்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ள பப்ஜி மதன் நேற்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இதனிடையே தன் மீது பதியப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில் எனது செயல்பாடுகளால் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. பப்ஜி விளையாடுவது ஒருபோதும் பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் செயல் எனக் கூற முடியாது. நான் விளையாடியது கொரியா பப்ஜி. இதனை இந்திய அரசு தடை செய்யவில்லை.

எனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொழில் போட்டியாளர்கள் எனது வீடியோவை எடிட் செய்து பதிவேற்றம் செய்துள்ளனர். குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துப் பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் எனக்கு முறையாக வழங்கப்படவில்லை. எனவே என் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 9) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதன் தொடர்ந்த வழக்கு குறித்து தமிழக அரசு மற்றும் சென்னை காவல் ஆணையர் ஆகியோர் நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

-பிரியா

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

3 நிமிட வாசிப்பு

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

4 நிமிட வாசிப்பு

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

3 நிமிட வாசிப்பு

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

திங்கள் 9 ஆக 2021