மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 ஆக 2021

கிச்சன் கீர்த்தனா: சேவ் பூரி

கிச்சன் கீர்த்தனா: சேவ் பூரி

சாட் உணவுகள் என்றாலே அவற்றுக்கென்றே இருக்கும் பிரத்யேகத் தெருக் கடைகள் மட்டும்தான் ஃபேமஸ் என்று நினைப்போம். ஆனால், இப்போதைய சூழ்நிலையில் வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்கும் குழந்தைகளை சாட் உணவுகளால் குஷிப்படுத்த ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே தெருக்கடை உணவுகளைத் தயாரிக்க முடியும். அதற்கு இந்த சேவ் பூரி பெஸ்ட் சாய்ஸ்.

என்ன தேவை?

பாப்டி எனப்படும் மைதா தட்டைகள் அல்லது சாட் தட்டை – 18 (இவை பெரிய கடைகளில் கிடைக்கும்)

உருளைக்கிழங்கு - ஒன்று (தோல் உரித்து, வேகவைத்து சிறிய சதுரமாக நறுக்கிக்கொள்ளவும்)

வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)

தக்காளி - இரண்டு (பொடியாக நறுக்கியது)

மாங்காய் - பாதி (பொடியாக நறுக்கியது, விருப்பப்பட்டால்)

பூண்டுச் சட்னி - 2 டீஸ்பூன்

இனிப்புச் சட்னி - 2 டீஸ்பூன்

பச்சைச் சட்னி - 4 டீஸ்பூன்

சாட் மசாலாத்தூள் - அரை டேபிள்ஸ்பூன்

வறுத்த சீரகத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன்

எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்

ஓமப்பொடி (சேவ்) - அரை கப்

கொத்தமல்லி - சிறிதளவு (நறுக்கியது)

வறுத்த கடலைப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?

ஒரு தட்டில் ஆறு தட்டைகளை வரிசையாக வைத்து அதன் மேல் சிறிது உருளைக்கிழங்கு துண்டுகளை லேசாக மசித்தவாறு போடவும். பிறகு அதன்மேல் நறுக்கிய வெங்காயத்தைத் தூவவும். பின்னர் இதில் பூண்டுச் சட்னி, இனிப்புச் சட்னி, பச்சைச் சட்னி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக ஊற்றவும். பிறகு சாட் மசாலா, வறுத்த சீரகத்தூள், மிளகாய்த்தூள், ஓமப்பொடி (சேவ்) மற்றும் கால் டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை பரவலாகச் சேர்க்கவும். இதன் மீது நறுக்கிய தக்காளி, மாங்காய், கொத்தமல்லி, வறுத்த கடலைப் பருப்பு தூவிப் பரிமாறவும். இதே போன்று மூன்று செட்டுகள் தயாரிக்கலாம்.

நேற்றைய ரெசிப்பி: காய்கறிகளை இனியும் கிருமி நீக்கம் செய்ய வேண்டுமா?

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

திங்கள் 9 ஆக 2021