மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 8 ஆக 2021

ரயில் கட்டண சலுகை இப்போது கிடையாது!

ரயில் கட்டண சலுகை இப்போது கிடையாது!

ஆசிரியர்கள், விருது பெற்றவர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற பல தரப்பினர் பலன் அடைந்து வரும் ரயில் கட்டண சலுகை இப்போது கிடையாது என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, மாநிலங்களவையில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், ‘‘இந்திய ரயில்வே துறை 51 பிரிவின் கீழ் பொதுமக்களுக்கு கட்டண சலுகையினை வழங்கி வருகிறது. இந்த சலுகைகளினால் ஆசிரியர்கள், விருது பெற்றவர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற பல தரப்பினர் பலன் அடைந்து வருகின்றனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால் மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், மாணவர்கள் உள்ளிட்ட அவசியமான 11 பிரிவினருக்கு மட்டும் கட்டண சலுகை அனுமதிக்கப்பட்டது. இதர பிரிவினருக்கான பயண சலுகைகள் நிறுத்தப்பட்டன. இதை மீண்டும் தொடங்குவதற்கான திட்டம் தற்போது இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் செயல்பாடுகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

-ராஜ்

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்! ...

3 நிமிட வாசிப்பு

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

ஞாயிறு 8 ஆக 2021