மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 8 ஆக 2021

முதியோர் மக்கள்தொகை: இரண்டாம் இடத்தில் தமிழகம்!

முதியோர் மக்கள்தொகை: இரண்டாம் இடத்தில் தமிழகம்!

‘இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் முதியவர்கள்’ என்ற தலைப்பிலான ஆவணத்தை மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் இரண்டாம் இடத்தில் தமிழகம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது கேரள மாநிலத்தில்தான் முதியவர்கள் அதிக அளவில் உள்ளனர். அங்குள்ள மொத்த மக்கள்தொகையில் முதியவர்களின் பங்கு 16.5 சதவிகிதம். அடுத்த இடத்தில் தமிழகத்தில் முதியவர்களின் அளவு 13.6 சதவிகிதமாக இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் இமாச்சல் (13.1%), பஞ்சாப் (12.6%), ஆந்திரா (12.4%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இதேபோல, நாட்டிலேயே முதியவர்கள் மிகக் குறைவாக இருக்கும் மாநிலங்களின் பட்டியலில் பிகார் முதலிடத்தில் உள்ளது. அங்குள்ள மக்கள்தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை 7.7 சதவிகிதமாக இருக்கிறது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் உத்தரப்பிரதேசம் (8.1%), அசாம் (8.2%) ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.

வரும் 2031ஆம் ஆண்டில் அதிக பட்சமாக கேரளாவில் 20.9 சதவிகித முதியவர்கள் இருப்பார்கள். தமிழகத்தில் 18.2%, இமாச்சலில் 17.1%, ஆந்திராவில் 16.4%, பஞ்சாபில் 16.2% என்ற விகிதத்தில் முதியவர்களின் எண்ணிக்கை இருக்கும் என இந்த புள்ளிவிவர ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

மாநிலத்தில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது அங்கு வளர்ந்த பொருளாதாரம், மருத்துவ வசதிகள் இருப்பதற்கான அறிகுறிகள் எனலாம். அதே சமயத்தில், குழந்தை பிறப்பு விகிதம் குறைவதும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

-ராஜ்

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

ஞாயிறு 8 ஆக 2021